சித்திர அன்னம்

Webdunia|
தேவையானவை:

பச்சரிசி - அரை கிலோ
எலுமிச்சை பழம் - ஒன்று
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4 அல்லது 5
காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3
பச்சை வேர்க்கடலை - அரை ஆழாக்கு
உப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு
கறிவேப்பிலை - தாளிப்பதற்கு
கடல¨ப் பருப்பு, முழு உளுந்து, கடுகு, சோம்பு, பெருங்காயத் தூள் - தாளிப்பதற்கு ஏற்ற அளவு
செய்முறை:

முதலில் சாதத்தை வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் அறிந்து வைத்துக் கொள்ளவும்.

எலுமிச்சை சாறை விதை இல்லாமல் பிழிந்து கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி முதலில் வேர்க்கடலையை வறுத்து எடுக்கவும்.

பின்னர் மேலும் தாளிக்க வேண்டிய அளவு எண்ணெய் ஊற்றி பெருங்காயம், கடலைப் பருப்பு, உளுந்து, சோம்பு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வறுக்கவும்.

பிறகு அதில் காய்ந்த மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் போட்டு ஒரே வதக்கலில் மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
உடனே எலுமிச்சை சாறை அதில் ஊற்றி ஒரே வதக்கலில் கலவையை இறக்கி விடவும்.

அதன்பின்னர், வடித்து வைத்திருக்கும் சாதம், வறுத்து வைத்திருக்கும் வேர்க்கடலை இரண்டையும் வதக்கி வைத்துள்ள கலவையில் சேர்த்து கிளறவும்.

அவ்வளவுதான் சித்திர அன்னம் தயார்.


இதில் மேலும் படிக்கவும் :