இன்றைய பாதுகாப்பற்ற வாழ்க்கைச் சூழலும் சமூகமும் நமது குழந்தைகளின் சுதந்திரத்தை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பிட்ட சில அறைகளுக்குள் மட்டுமே பறந்து திரியும் வாழ்க்கையை மட்டுமே நமது குழந்தைகளுக்குப் பரிசாக தந்திருக்கிறோம் என்பதே உண்மை.