பழம் பெரும் தேசத்தின் சுதந்திரமான 61 ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறோம். இன்னமும் நிறைய மாற்றங்கள் வேண்டும் என்ற கனவு நமது கண்களில் மிதந்தாலும், அவைகள் நனவாக நாம கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம். இதுவரை நாம் பயணம் செய்த பாதையை திரும்பிப் பார்த்தே நமது எதிர்காலத்தை நம்மால் தீர்மானிக்க முடியும்.