1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (23:42 IST)

சப்போட்டா பழத்தில் மசாஜ் செய்வதால் என்ன நன்மை?

சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராகி, கொழுப்பை கரைக்கிறது. இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. வயிற்றெரிச்சல், மலச்சிக்கல், மூலநோய்க்கு சிறந்த  தீர்வாகிறது.
 
 
பழுத்த சப்போட்டா பழம் 2 ஸ்பூன், தேங்காய் பால், தேன் தலா 1 ஸ்பூன் மூன்றையும் கலந்து ஃபேஷ் மசாஜ் செய்யவும். கழுத்து, கை, முகம், கண்களுக்கு கீழ்,  நெற்றி பகுதிகள், கைகள் அழுத்தபடும்படி அழுத்தப் புள்ளிகளைப் பார்த்து மசாஜ் செய்யவும். அழுத்தப் புள்ளிகளைப் பார்த்து மசாஜ் செய்யும்போது முகத்திற்கு ரத்த  ஓட்டம் அதிகரித்து முகப்பொலிவு பெறும்.
 
மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் துடைக்கவும். இதை செய்யும்போதே மிருதுவாகக் காணப்படும்.
 
சப்போட்டா பழத்துடன் சிறிதளவு பால் சேர்த்து அரைக்கவும், அந்த விழுதுடன் இரண்டு டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடர் கலந்து குளிப்பதற்கு முன் கை, முழங்கை விரல்களில் நன்றாக பூசி குளிக்கவும். சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம் கைகளை பொலிவாக்க உதவும்.
 
இரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது, நான்கு துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம்,  பாதங்களில் தடவி குளித்து வர அவை வறட்சி நீங்கி மன்மையாக விளங்கும்.
 
சப்போட்டா பழ சதையை எடுத்து அத்துடன் ரோஸ் வாட்ட்டர், சிறிது சந்தன பவுடர் கலந்து, இதனை முகம் முதல் கழுத்து வரை தடவ வேண்டும். காய்ந்த பின்னர்  இளம் சூடான நீரில் கழுவினால் முகம் பளபளப்பாகும்.