வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Murugan
Last Modified: திங்கள், 20 ஜூன் 2016 (21:09 IST)

ஜலதோஷத்தில் இருந்து பாதுகாக்க....

ஜலதோசத்தால் பாதிப்புடையவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:


 

 
1.) ஜலதோசத்தால் பாதிக்கபட்டவர்கள் சாம்பார் வெங்காயம் ஒன்று அல்லது இரண்டினை இரவு படுக்கைக்குச் செல்லும் முன் நன்கு மென்று தின்றுவிட்டு சுடுநீர் பருகிவிட்டு படுக்கைக்கு சென்றால் காலையில் ஜலதோசம் பறந்துவிடும்.
 
2.) கசகசாவை அரைத்து பாலில் கலந்து கொடுத்தால் ஜலதோசம் விலகும். 
 
3.) தேங்காய் எண்ணையை சுடவைத்து கற்பூரம் சேர்த்து கரைந்ததும் இளஞ்சூட்டில் நெஞ்சு, கழுத்து, கை, கால்களில் தடவ சளி குணமாகும்.
 
4.) ஒரு துண்டு சுக்கை(Dry Ginger) தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
 
5.) சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் பூண்டு சாறு கொடுத்துவர மெல்ல மெல்ல குணம் பெறலாம்.
 
6.) பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து இரவில் படுக்கைக்கு செல்லும் முன்பு மிதமான சூட்டில் அருந்தினால், காலையில் ஜலதோசம் பறந்து போகும். 
 
7.) மஞ்சளை சுட்டு அதிலிருந்து வரும் புகையை முகர்ந்தாலும் ஜலதோசம் குறையும்.
 
8.) கற்பூர வள்ளி இலையை பறித்து தவாவில் வாட்டி சாறு பிழிந்து குழந்தைகளுக்கு கொடுக்க சளி தொல்லை தீரும்.
 
9.) குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சிறிது பால் கொடுத்து விட்டு பிறகு சாறு கொடுக்க வாந்தி வரும் அதனுடன் சளியும் சேர்ந்து வெளியே வந்துவிடும். உடனே நிவர்த்தி கிடைக்கும்.
 
10.) ஜலதோசத்தால் பாதிக்கபட்டவர்கள் துளசி, சுக்கு, மிளகு, திப்பிலி, கற்பூரவள்ளி பயன்பாடுகள் எத்தகைய சளித்தொல்லையாக இருந்தாலும், உடனே நிவர்த்தி கிடைக்கும். சளியை விரட்டியடிக்கும்.