வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sasikala
Last Updated : சனி, 9 ஜனவரி 2016 (12:01 IST)

டைட்டானிக் ஹீரோ ஏன் இயக்குனராகவில்லை?

இப்படியொரு கேள்வியை லியோனார்டோ டிகாப்ரியோவிடம் கேட்டனர். அதற்கு அவரது பதில், வழக்கமாக எல்லா நடிகர்களும் சொல்வதுதான்.


 
 
அலெஜான்ட்ரோ, மார்டின் ஸ்கார்சஸி போன்ற அற்புதமான இயக்குனர்களின் படங்களின் நடிக்கும் ஆசிர்வாதம் எனக்கு கிடைத்திருக்கிறது. ஒரு படம் எடுப்பது என்பது பல விஷயங்களை உள்ளடக்கியது. அதிலெல்லாம் என்னால் கவனம் செலுத்த முடியும் என்று தோன்றவில்லை என பதிலளித்துள்ளார்.
 
டிகாப்ரியோவுக்கு இதற்கு முன்பே ஆஸ்கர் விருது கிடைத்திருக்க வேண்டும் என்பது பரவலான கருத்து. இந்தமுறை அவரது த ரெவனென்ட் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் போட்டியில் இடம்பெறும், விருதை அவர் தட்டிச் செல்வார் என பலரும் எதிர்பார்க்கின்றனர். அதற்கான எல்லா தகுதிகளும் அவருக்கு உள்ளது.