வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 22 ஜூன் 2015 (20:03 IST)

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - டாலர் மழையில் டைனோசர்கள்

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் டைனோசர்களை வைத்து வெளியான ’ஜுராசிக் வேர்ல்ட்’ திரைப்படம் டாலர் மழையில் நனைந்து வருகிறது.
 
5. Dope

ப்ரவுன் சுகர், அவர் பேமிலி வெட்டிங் படங்களை இயக்கியவரின் புதிய படம், டோப். விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற இப்படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது.


 

முதல் மூன்று தினங்களில் படத்தின் வசூல், 6.02 மில்லியன் டாலர்கள்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

4. San Andreas

பிரமாண்டமாக தயாரான இப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. சென்ற வார இறுதியில் 8.2 மில்லியன் டாலர்களை தனதாக்கிய படம் இதுவரை 132.23 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.


 
மேலும் அடுத்தப் பக்கம்...

3. Spy
 
மெலிஸா மெக்கார்த்தி நடித்துள்ள இந்த ஆக்ஷன் காமெடி சென்ற வார இறுதியில் 10.50 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரையான யுஎஸ் வசூல் 74.37 மில்லியன் டாலர்கள்.


 
மேலும் அடுத்தப் பக்கம்...
 

2. Inside Out
 
சென்றவாரம் வெளியான டிஸ்னியின் இந்த அனிமேஷன் படம் பார்வையாளர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.

 


300 மில்லியன் டாலர்களை யுஎஸ்ஸில் மட்டும் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 91.06 மில்லியன் டாலர்கள்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

1. Jurassic World
 
இந்த வாரமும் அதே முதலிடத்தில். முதல் வார இறுதியில் 200 மில்லியன் டாலர்களை தாண்டி வசூலித்த இப்படம் இரண்டாவது வார இறுதியில் ஐம்பது சதவீதமாக கீழிறங்கியிருக்கிறது.


 

அதாவது சென்ற வார இறுதியில் இதன் வசூல் 102.02 மில்லியன் டாலர்கள். இதுவரை 398.23 மில்லியன் டாலர்களை வசூலித்து அசைக்க முடியாத முதலிடத்தில் உள்ளது.