வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Suresh
Last Updated : சனி, 27 ஜூன் 2015 (10:11 IST)

ஹி இஸ் பேக் - ஜுலை 1 யுஎஸ்ஸில் வெளியாகும் டெர்மினேட்டர் ஜெனிசைஸ்

டெர்மினேட்டர் பட ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.


 

 
1984 -இல் வெளியான முதல் படம், த டெர்மினேட்டர், அதன் இரண்டாம் பாகமான டெர்மினேட்டர் 2 - ஜட்ஜ்மெண்ட் டே (1991) இரண்டையும் ஜேம்ஸ் கேமரூன் இயக்கினார்.
 
இன்று உலகம் முழுவதும் இருக்கும் டெர்மினேட்டர் பட ரசிகர்களும், இந்த இரு படங்களையும் குறிப்பாக இரண்டாவது பாகம், டெர்மினேட்டர் 2 - ஜட்ஜ்மெண்ட் டே பார்த்து உருவானவர்கள்.
 
அதன் பிறகு மூன்றாவது பாகம், டெர்மினேட்டர் 3 - ரைஸ் ஆஃப் த மெஷின்ஸ் 2003 -இல் வெளியானது. டெர்மினேட்டர் படங்களின் மீதிருந்த மதிப்பை இந்தப் படம் காலி செய்தது.
 
ஆனால், ஹாலிவுட் அதனை விடுவதாக இல்லை. 2009 -இல் நான்காவது பாகம், டெர்மினேட்டர் சால்வேஷனை வெளியிட்டது.
 
இதில் அர்னால்டு ஸ்வாஸ்நேகர் சின்ன வேடத்தில் மட்டுமே நடித்திருந்தார். மூன்றாவது பாகத்துக்கு இது பரவாயில்லை.
 
ஐந்தாவது பாகம், டெர்மினேட்டர் ஜெனிசைஸ் நேற்று முன்தினம் 25 -ஆம் தேதி கொலம்பியா, டென்மார்க், கிரீஸ், சிங்கப்பூர், பெரு உள்ளிட்ட நாடுகளில் வெளியானது.
 
நேற்று பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் துருக்கி உள்ளிட்ட சில நாடுகள். ஜுலை ஒன்றாம் தேதி யுஎஸ்ஸில் இப்படம் வெளியாகிறது. ஜுலை மூன்றாம் தேதி இந்தியாவில் வெளியிடுகின்றனர்.
 
படத்துக்கு கிடைத்திருக்கும் விமர்சனங்கள் மிக மோசமாகவே உள்ளது. 170 மில்லியன் டாலர்களில் இப்படம் தயாராகியுள்ளது.