1. ஆன்மிகம்
  2. »
  3. ஆன்மிகம்
  4. »
  5. இந்து
Written By Webdunia

ஸ்ரீ மஹாலஷ்மியை தோத்திரம் செய்வதன் மூலம் சர்வ கார்ய ஸித்திகள்

ஸ்ரீ மஹா லஷ்மித் தேவியைத் தங்களுடைய இஷ்டத் தெய்வமாகக் கொண்டு உபாசித்து வருபவர்கள் அநேகம் பேர். அவளுக்குரிய சில பவித்திரமான மந்திரங்களை ஜபிப்பதன் மூலமாக -அவளுடைய அருளை, அவளை ஆராதிப்பவர்கள் அடையலாம்.அத்துடன் சகல கார்யங்களிலுமசகல விதமான சித்திகளையும் அடையலாம்.

இவ்வாறு சித்தி பெறுவதற்குரிய மந்திர மார்க்கங்களை அனுசரித்து எப்படிப் பலன் பெறலாம் என்பதைக் காணலாம்.

1. அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அடைவதற்கு . . .

கீழ் வரும் மந்திரத்தினைத் தினந்தோறும் காலையில் எழுந்து -இருபத்து ஏழு தடவை ஜபம் செய்யவும்.

மந்திரம் :

மஹா லக்ஷ்மீர் மஹாகாளீ மஹாகந்யா ஸரஸ்வதீ
போக வைபவ ஸந்தாத்ரீ பக்தானுக்ரஹ காரிணீ

2. எல்லாவிதப் பயங்களும் ஒழிய . . .

கீழ் வரும் மந்திரத்தைத் தினந்தோறும் மாலையில் பனிரெண்டு தடவை ஜபம் செய்யவும்.

மந்திரம் :

பத்ரகாளீ கராளீ ச மஹாகாளீ திலோத்தமா
காளீ கராள வக்த்ராந்தா காமாக்ஷீ காமதா ஸுபா

3. ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய எண்ணும் போது,
அதில் வெற்றி கிட்ட வேண்டும் என்றால் . . .

கீழ் வரும் மந்திரத்தைத் தாங்கள் எந்தக் காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணினார்களோ -

அந்தக் காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் தினந்தோறும் பத்துத் தடவை ஜபம் செய்து வரவும்.

மந்திரம் :

ஜயா ச விஜயா சைவ ஜயந்தீ சாபராஜிதா
குப்ஜிகா காளிகா ஸாஸ்த்ரீ வீணா புஸ்தக தாரிணீ

4. எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட . . .

கீழ் வரும் மந்திரத்தைக் காலையில் எழுந்தவுடன் பதினெட்டுத் தடவை. தினந்தோறும் ஜபிக்கவும்.

மந்திரம் :

பிப்பலா ச விஸாலாக்ஷீ ரன்க்ஷக்க்நீ வ்ருஷ்டி காரிணீ
துஷ்ட வித்ராவிணீ தேவீ ஸர்வோபத்ரவ நாஸிநீ

5. கல்வியில் வல்லமை பெற . . .

கீழ் வரும் மந்திரத்தைக் காலையில் எழுந்தவுடன் பனிரெண்டு தடவை ஜபிக்கவும்.

மந்திரம் :

அர்த்த நாரீஸ்வரி தேவீ ஸர்வ வித்யா ப்ரதாயிநீ
பார்கவீ பூஜுஷீ வித்யா ஸர்வோபநிஷ தாஸ்திதா

6. ஒன்று மாற்றி ஒன்றாகக் கஷ்டங்கள் வந்து
கொண்டே இருந்தால் . . .

கீழ் வரும் மந்திரத்தைத் தினந்தோறும் நூற்றியெட்டுத் தடவை ஜபம் செய்து வந்தால் கஷ்டங்கள் நிவர்த்தியாகும்.

மந்திரம் :

கேதநீ மல்லிகா ளஸோகா வாராஹீ தரணீத்ருவா
நாராஸிம்ஹீ மஹோக்ராஸ்யா பக்தாநா மார்தி நாஸிநீ

7. மோட்ச பாக்கியம் பெற வேண்டும் என்று விரும்பினால் . . .

கீழ் வரும் மந்திரத்தைத் தினமும் பதினாறு தடவை ஜபம் செய்து வரவும்.

மந்திரம் :

கைவல்ய பதவீ புண்யா கைவல்ய ஜ்ஞாந லக்ஷிதா
ப்ரஹ்ம ஸம்பத்தி ரூபா ச ப்ரஹ்ம ஸம்பத்தி காரிணீ

8. எல்லா விதமான நோய்களும் நீங்க . . .

கீழ் வரும் மந்திரத்தைத் தினந்தோறும் காலையில் எட்டு முறை ஜலத்தில் ஜபிக்கவும்.

அந்த ஜலத்தை நோயாளியின் மேல் தெளிக்கவும். உள்ளுக்கும் அருந்தக் கொடுக்கவும்.

மந்திரம் :

ஸர்வ ப்ரமாணா ஸம்பத்தி : ஸர்வரோக ப்ரதிக்ரியா
ப்ரஹ்மாண்டாந்தர் பஹிர் வ்யாப்தா விஷ்ணு வக்ஷோ விபூஷணி

9. சீக்கிரத்தில் திருமணம் நடைபெற . . .

கீழ் வரும் மந்திரத்தைக் காலையில் பத்துத் தடவை ஜபிக்கவும்.

மந்திரம் :

புத்ர பௌத்ராபி வ்ருத்திஸ்ச வித்யா போக பலாதிகம்
ஆயுராரோக்ய ஸம்பத்தி : அஷ்டைஸ்வர்யம் த்வமேவ ஹி

10. எல்லாவித நன்மைகளும் உண்டாக . . .

கீழ் வரும் மந்திரத்தை இரவில் தூங்கச் செல்வதற்கு முன் -

தினமும் பதினோரு தடவை ஜபித்து வரவும்.

மந்திரம் :

மங்களம் மங்களாநாம் த்வம் தேவாத்நாம் ச தேவதா
த்வமுத்த மோத்த மாநாம்ச த்வம் ஸ்ரேய : பரமாம்ரு தம்

11. விஷத்தினால் உண்டாகக்கூடிய அச்சம் அகல . . .

கீழ் வரும் மந்திரத்தை -

விஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் காதுகளில் குனிந்து எத்தனை அதிகத் தடவை கூறமுடியுமோ அத்தனை அதிகமாகக் கூறினால் -

விஷத்தினால் உண்டாகும் ஆபத்து விலகும்.

மந்திரம் :

க்ஷ&த்ர ஜந்து பயக் நீ விஷரோகாதி பஞ்ஜநீ
ஸதா ஸாந்தா ஸதா ஸுத்தாக்ருஹச் சித்ரநிவாரிணீ

12. ஞானம் வளர . . .

கீழ் வரும் மந்திரத்தைக் காலையில் பனிரெண்டு தடவை தினந்தோறும் ஜபிக்கவும்.

மந்திரம் :

அர்த்த நாரீஸ்வரீ தேவீ ஸர்வ வித்யா ப்ரதாயிநீ
பார்கவீ பூஜுஷீ வித்யா ஸர்வோப நிஷ தாஸ்திதா.