திருப்பாவை பாசுரம் பாடல் 28


ஸ்ரீ.ஸ்ரீ.| Last Modified புதன், 13 ஜனவரி 2016 (05:00 IST)
திருப்பாவை பாசுரம் பாடல் 28
 
கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்!
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்;
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே,
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

 
 
பொருள் :
 
"கண்ணா! எங்களுக்கு வேறெதுவும் தெரியாது.
உன்னைத் தவிர, வேறு போக்கிடமும் இல்லை.
அருள் செய்" என்று வேண்டும் பாடல்.
 
கண்ணா! எங்களுக்கு ஒன்றுமே தெரியாது. பசுக்களின் பின்னால் காட்டிற்குப் போவோம். உண்போம்.
 
இடைக்குலத்தில் வந்து, நீ இருந்தும் எங்களுடைய
அவதரிக்கும் படியான புண்ணியம், எங்களுக்கு இருக்கிறது. கோவிந்தா!
 
உன்னோடு எங்களுக்குண்டான உறவானது, இங்கு
உன்னாலும் எங்களாலும் நீக்க முடியாதது.
ஒன்றுமறியாத குழந்தைகளான நாங்கள், உன் மேல் உள்ள அன்பினால், பலவாறாக உன்னை அழைத்திருக்கிறோம்.
 
அதற்காக எங்களிடம் கோபித்தருளாதே. பெருமாளே! நீ எங்களுக்குப் பறை தந்து அருள்புரி.

                                                                                      விளக்கவுரை: ஸ்ரீ.ஸ்ரீ.


இதில் மேலும் படிக்கவும் :