வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By ஸ்ரீ.ஸ்ரீ.
Last Updated : செவ்வாய், 5 ஜனவரி 2016 (17:08 IST)

திருப்பாவை பாசுரம் பாடல் 20

திருப்பாவை - பாடல் 20
 
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலேழாய்!
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா ! துயிலெழாய் ;
செப்பன்ன மென்முலை செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் ! திருவே ! துயிலெழாய் !
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பா வாய்.


 
 
பொருள் :
 
கண்ணனையும், 'இப்போதே எங்களை நீராட்டு ' என நப்பின்னையையும் - எழுப்புவதாக அமைந்த பாடல்.
 
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் துன்பம் வருவதற்கு முன்னாலேயே அவர்கள் நினைத்த இடம் சென்று, அவர்களின் நடுக்கத்தைத் தடுக்கின்றவனே ! 
 
(தீர்க்கின்றவனே!), வலிமை வாய்ந்த கண்ணா! எழுந்திரு. அடியவர்களைக் காப்பதற்காகத் தீயவர்களை அழிக்கவல்ல நேர்மையும் வலிமையும் கொண்டவனே! 
 
பகைவர்களுக்கு பயத்தை உண்டாக்கும் விமலனே! எழுந்திரு. 
 
நப்பின்னையே! தங்கக்கலசம் போன்ற நெஞ்சையும், சிவந்த வாயையும், மெல்லியதான இடையையும் உடைய - பெரிய பிராட்டியான மஹாலஷ்மியைப் 
 
போன்றவளே! எழுந்திரு. எங்கள் நோன்பிற்கு உண்டான விசிறி, கண்ணாடி ஆகியவைகளைத் தந்து; உன் மணவாளனாகிய கண்ணனையும் தந்து, இப்போதே எங்களை நீராட்டு.
 
                                                                                                                விளக்கவுரை: ஸ்ரீ.ஸ்ரீ.