திங்கள், 8 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 29 அக்டோபர் 2025 (22:31 IST)

கந்த சஷ்டி: புற்றிடங்கொண்டீஸ்வரர் ஆலயத்தில் முருகப்பெருமான் திருக்கல்யாணம்!

கந்த சஷ்டி: புற்றிடங்கொண்டீஸ்வரர் ஆலயத்தில் முருகப்பெருமான் திருக்கல்யாணம்!
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை அருகே உள்ள புத்தூர் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத புற்றிடங்கொண்டீஸ்வரர் திருக்கோயிலில், கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
 
முருகப்பெருமானுக்கும், அவரது தேவியர்களான வள்ளி மற்றும் தெய்வானைக்கும் (தேவசேனா) திருக்கல்யாணம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
 
இந்த வைபவத்தையொட்டி, பெண்கள் சீர்வரிசை தட்டுகள் ஏந்தி வர, சுவாமி மற்றும் அம்பாளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து யாகசாலை பூஜைகள், மாலை மாற்றும் நிகழ்வு ஆகிய சடங்குகள் நடைபெற்றன.
 
வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற இந்த திருக்கல்யாண வைபவத்தில், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை பக்தி பரவசத்துடன் தரிசித்தனர்.
 
Edited by Mahendran