திருக்கார்த்திகை தீபத்தின் சிறப்புகள்.......


Sasikala| Last Updated: வியாழன், 19 நவம்பர் 2015 (15:32 IST)
கார்த்திகை மாதம் பிறந்து விட்ட நிலையில் கார்த்திகை என்றாலே நம் நினைவுக்கு வருவது தீபம்.  

 
கார்த்திகை மாதம் பிறந்து விட்ட நிலையில் கார்த்திகை என்றாலே நம் நினைவுக்கு வருவது தீபம்.  தீபம் என்றால் ஒளி, வெளிச்சம், கோயில், விரதம், கோலம், விதவிதமான விளக்குகள், உணவு ஆகியவையாகும்.  அதில் மிகவும் பிரசித்தி பெற்றது அகல் விளக்கு.  அகல் விளக்கை வீடுகளில் ஏற்றி பூஜை செய்வது வழக்கம். பூஜை அறையில் காமாட்சி விளக்கும் இரு புறமும் குத்து விளக்கும், அகல் விளக்கை கோலத்தை சுற்றியும், வாசற்படியிலும் வரிசையாக வைப்பார்கள்.
 
விளக்குகளில் பல வகைகள் உண்டு. அவற்றில் மண் விளக்கு, குத்து விளக்கு, தூண் விளக்கு, முகப்பில் அன்னம் பொருத்தப்பட்ட அன்ன விளக்கு, பாவை விளக்கு, தூண்டா விளக்கு,  அஷ்டலஷ்மி விளக்கு, கிளி கொத்து விளக்கு, தற்போது பீங்கான் விளக்கு, மா விளக்கு ஆகியவை உள்ளது. பண்டைய காலம் முதலே பெண்கள் புகுந்த வீட்டிற்கு வந்தவுடன் விளக்கேற்ற வேண்டும் என்கிற பழக்கத்தை இன்றும் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
 
திருக்கார்த்திகை தீபத்தின் முதல் நாளே விளக்குகள் சுத்தம் செய்யப்படுவதுண்டு.  இந்த இந்த கிழமைகளில்தான் விளக்கை துலக்க வேண்டும் என்றும் அவை சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் துலக்குவது நல்லது.  மற்ற நாள்களில் தேய்த்தால் அவற்றில் குடியிருக்கும் லட்சுமி வெளியேறுவாள் என்பது நம்பிக்கை.
 
விளக்குகளை சுத்தம் செய்ய இப்பொழுது பீதாம்பரி போன்ற பொடிகள் இருந்தாலும், முன்பெல்லாம் புளி, செங்கல் தூள், எலுமிச்சை பழம், தேங்காய் நார் இவற்றை பயன்படுத்தினார்கள்.
 
சுத்தம் செய்த விளக்குகளை நல்லெண்ணையால் நிரப்பி திரியிட்டு, பூ சூடி, மஞ்சள், குங்குமம் வைத்து தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம்.
தெற்கு திசையை நோக்கி விளக்ககேற்ற கூடாது.  மற்ற திசைகளில் ஏற்றலாம்.  அரிசி மாக்கோலம் போட்டு அதனை சுற்றி அகல் விளக்கு 
ஏற்றுவது வழக்கம். குத்து விளக்கில் ஐந்து முகங்கள் உண்டு.  அவை பஞ்ச பூதங்களை வலிவுறுத்துவதாக அமைந்துள்ளது. 
 
வீடுகளில் பயன்படுத்தும் விளக்கு பெரும்பாலும் பித்தளையால் செய்யபட்டவையாக இருக்கும்.  விளக்குகள் காலையில் பிரம்ம முகூர்த்த வேளை (காலை 4 மணிக்கு மெல்) ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறலாம்.  மாலையில் 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள்ளாக தீபம் ஏற்றினால் நல்லது. 
 
விரதம் இருந்து சிறப்பான உணவு வகைகளை சமைத்து படைத்து பூஜை செய்து விரதத்தை முடித்து கொள்வார்கள்.
 
விளக்கேற்றும்போது இந்த ஸ்லோகத்தை சொல்லி ஏற்றினால் நல்லது
 
தீப ஜொதியானவளெ நமஸ்காரம்
திருவாகி வந்தவளே நமஸ்காரம்
ஆபத் பாந்தவியே நமஸ்காரம்
அனு தினமும் கார்த்திடுவாய் நமஸ்காரம்
 
விளக்கை எக்காரணம் கொண்டும் வாயால் ஊதி அனைக்க கூடாது.  கையால் வீசியும் அனைக்க கூடாது. பூவை பயன்படுத்தியும் அனைப்பது தவறு. திரியை உட்பக்கமாக இழுத்துக் குளிரவைப்பதே நன்மையை தரும்.
 
திருக்கார்த்திகை தீபத்தன்று அனைவரும் வீடுகள்தோறும் தீபம் ஏற்றி அனைத்து செல்வங்களையும் பெற்று வளமோடு வாழ இறைவனை வேண்டி மகிழிந்திருப்போம்.


இதில் மேலும் படிக்கவும் :