1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Webdunia

ராம நவமி தெரியும்.. இன்று சீதா நவமி என்பது தெரியுமா? சீதையை வழிபட சிறந்த நேரம் எது?

ராம நவமி தெரியும்.. இன்று சீதா நவமி என்பது தெரியுமா? சீதையை வழிபட சிறந்த நேரம் எது?
வைசாக மாதத்தின் சுக்ல பட்ச நவமி திதியில் அன்னை சீதா தேவி பூமியில் அவதரித்த தினமே சீதா நவமி என போற்றப்படுகிறது. மிதிலை மன்னன் ஜனகர் யாகத்திற்காக பூமியை உழுதபோது ஒரு கலசத்தில் சீதையை கண்டெடுத்ததால், இந்நாள் 'ஜானகி ஜெயந்தி' என்றும் அழைக்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டில் சீதா நவமி இன்று பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்படுகிறது.
 
பஞ்சாங்கத்தின்படி, நவமி திதி ஏப்ரல் 24, இரவு 7:21 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 25, மாலை 6:27 மணி வரை நீடிக்கிறது. பூஜைக்கு உகந்த மதிய நேர முகூர்த்தம் காலை 11:20 மணி முதல் மதியம் 1:53 மணி வரை ஆகும். குறிப்பாக மதியம் 12:37 மணி என்பது அன்னை சீதையை வழிபட மிகவும் சிறப்பான நேரமாக கருதப்படுகிறது.
 
இந்நாளில் பக்தர்கள் அதிகாலையில் நீராடி, சீதா தேவியுடன் ராமபிரானையும் சேர்த்து வழிபடுவது வழக்கம். அன்னைக்கு மலர்கள் மற்றும் நைவேத்தியம் படைத்து விரதம் மேற்கொள்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். 
 
சீதா நவமி அன்று விரதமிருந்து வழிபடுவது, பதினாறு மகா தானங்களை செய்ததற்கும், அனைத்துப் புண்ணிய தலங்களுக்கும் சென்றதற்கும் சமமான பலனை தரும் என்பது ஐதீகம். ஸ்ரீராம மற்றும் சீதா தேவியின் மந்திரங்களை 11 முறை உச்சரிப்பது மன அமைதியையும், விருப்பங்கள் நிறைவேறவும் வழிவகுக்கும்.
 
Edited by Siva