வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : வியாழன், 26 நவம்பர் 2015 (14:26 IST)

பக்தன் எப்படி இருக்கவேண்டும்

ஒரு பக்தன் எப்படி இருக்க வெண்டும் கந்தபுராணத்தில் முருகப்பெருமான் சொல்லியிருக்கிறார்.


 
 
1. தெளிவான அறிவோடு இருக்கவேண்டும்.
 
2. எல்லோரிடமும் அமைதியாகவும் இனிமையாகவும் பேச வேண்டும்.
 
3. உணர்ச்சியை வென்றவனாக நடந்துகொள்ளவேண்டும்.
 
4. எவரிடமும் எந்த விதத்திலும் பகைமை பாரட்டாதிருக்க வேண்டும்.
 
5. தீய செயல்களை சிந்திக்காதவனாக இருக்க வேண்டும்.
 
6. நல்ல காரியங்களை செய்பவனாகவும், பிறர் இன்ப துன்பங்களில் ஈடுபாடு கொண்டவனாகவும் இருக்க வேண்டும்.
 
7. எல்லா உயிர்களிடத்தும் கடவுள் இருப்பதை உணர்ந்தவனாகவும்,ஏற்றத்தாழ்வு பார்க்காதவனாகவும் செயல்பட வேண்டும்.
 
8. ஏழை எளியவர்களுக்கு உதவி செய்பவனாக இருக்க வேண்டும்.
 
9. பிறர் குறைகளை பற்றி கவலைப்படாமல் அவனுக்கு உதவிடவேண்டும்.
 
மேற்கூறிய குணநலன்கள் இருந்து ஈடுபாட்டுடன் என்னிடம் பக்தி செலுத்துபவன் எவனோ அவனே உண்மையான பக்தன்.  இதில் ஒரு குறை இருந்தாலும் அவனை என் பக்தனாக ஏற்க மாட்டேன்.