வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

பெண்களின் கன்னங்கள் பளிச்சிட அழகு குறிப்புகள்

பெண்களின் கன்னங்கள் பளிச்சிட அழகு குறிப்புகள்

1. மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து பத்து நிமிடம் வாய்க்குள் வைத்து பின் கொப்பளிப்பது நல்லது. இப்படி தொடர்ந்து செய்வதால் கன்னத்தின் அழகு அதிகரிக்கும்.


 
 
2. பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன், பால் சேர்த்து முகத்தில் போசி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சிடும்.
 
3. சந்தனம், மஞ்சள் போன்றவற்றை பொடியாக்கி முகத்தில், கை, கால்களில் தடவலாம். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் பால், வெண்ணை கலந்து குழைத்துப் பூச வேண்டும்.
 
4. ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் மாறும்.
 
 
5. எண்ணைத் தன்மை கொண்ட சருமத்தை உடையவர்கள் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, தக்காளிச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கலந்து சிறிதளவு தேனும் சேர்த்து உடலில் பூசலாம்.