வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (16:12 IST)

பப்பாளியில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்

பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ள பப்பாளி பழம் எங்கும் எளிதில் கிடைக்கக் கூடிய பழமாகும். அது மட்டுமல்ல.. விலை குறைவாக கிடைக்கக் கூடிய பழங்களில் இதுவும் ஒன்று.


 

 
1. சர்க்கரை நோயாளிகளுக்கு பப்பாளிக்காய் சமையல்  மிகமிக நல்லது.
 
2. பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, ரிபோ பாப்பைன் என்சைம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் இ மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன.
 
3. அல்சர் தொல்லை உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
 
4. பப்பாளி ஒரு நல்ல மருந்தாகும். வயிற்றுக்கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்றவற்றுக்கும் பப்பாளி சிறந்த நிவாரணம் தரும்.
 
5. தினமும் காலையில் இதனை சாப்பிட்டு வநதால் மலச்சிக்கல் விரைவில் குணமாகும்.
 
6. சீரற்ற மாதவிலக்கு பிரச்சனை உள்ள பெண்களுக்கு இப்பழம் ஒரு அருமருந்து. பப்பாளியில் உள்ள பப்பாயின் என்சைம்களில் ஆர்ஜினைன்(Arginine) என்ற மூலப்பொருள் உள்ளது. அது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவும். மேலும், ‘கார்பின்’ இருதயத்துக்கும் ‘ஃபைப்ரின்’ ரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றன.
 
7. குழந்தைகளுக்கு பப்பாளி பழத்தை அடிக்கடி கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு மற்றும் பல் வளர்ச்சியில் உறுதி ஏற்படும்.
 
8. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் வெந்நீரால் கழுவி வர முகச்சுருக்கம் மறைந்து முகம் அழகு பெறும்.
 
9. பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதி துண்டுகளை முகப்பரு உள்ளவர்கள் தங்களது முகத்தில் மென்மையாக தேய்த்து வந்தால், பருக்களை போக்குவதோடு முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி பொலிவு கிடைக்கும். பப்பாளிப் பழத்தை தேனில் நனைத்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். கல்லீரல் கோளாறுகளுக்கும் நல்ல தீர்வாக இருக்கும்.
 
10. ஆன்டிபயாடிக் மருந்து எடுத்துக்கொண்டவர்கள், சிகிச்சைக்குப் பின் நிறைய பப்பாளிப் பழம் சாப்பிட வேண்டும். காரணம், குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.