குறட்டைக்கும் சர்க்கரை நோய்க்கும் தொடர்பு உண்டா?
தூக்கத்தில் குறட்டை விடுவது என்பது வெறும் சத்தம் மட்டுமல்ல, அது ஒரு தீவிரமான உடல்நல பாதிப்பின் அறிகுறி என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குறட்டை விடுவதால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சுவாச பாதையில் ஏற்படும் சதை வளர்ச்சி, தசை தளர்வு அல்லது உடல் பருமன் காரணமாக தூக்கத்தின் போது சீராக சுவாசிக்க முடிவதில்லை. இதனால் உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது, அகச்சுரப்பிகள் பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் உருவாகின்றன.
குறட்டையை சாதாரணமான விஷயமாக கருதாமல், ஆரம்பக்கட்டத்திலேயே உரிய சிகிச்சை மேற்கொள்வது இதயம் தொடர்பான பாதிப்புகளை தவிர்க்க உதவும். ஆரோக்கியமான வாழ்விற்கு ஆழ்ந்த மற்றும் தடையற்ற உறக்கம் மிக அவசியமாகும்.
Edited by Mahendran