1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

பார்வைத் திறனை மேம்படுத்த உதவும் சப்போட்டா

பார்வைத் திறனை மேம்படுத்த உதவும் சப்போட்டா

பெருமளவிலான சுகாதார நன்மைகளை தரும் பழங்களில் ஒன்றாகும். இந்த பழம் எளிதாக செரிமானமாவதோடு மட்டுமல்லாமல், அதில் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதன் காரணமாக நம் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கி நிறைவாக்குகிறது.


 
 
இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.
 
சப்போட்டா பழத்தில் அதிகளவில் இரும்புச் சத்து, பொட்டாசியம் சத்து, பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளதால், உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. 
 
சப்போட்டா பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.
 
சப்போட்டா வைட்டமின் ஏ என்னும் சத்தை அதிக அளவு கொண்டுள்ளது மற்றும் ஆராய்ச்சியின் படி, அதிக அளவு வைட்டமின் ஏ-யினால் வயதான காலத்திலும் கூட, பார்வையை மேம்படுத்த உதவுகிறது. எனவே நல்ல பார்வை கிடைப்பதற்கு சப்போட்டா பழங்களை சாப்பிட முயற்சிக்க வேண்டும்.
 
வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள் நிறைந்துள்ள சப்போட்டா பழம் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. இந்த பழத்தில் நார் சத்து உள்ளதால் செரிமாணத்துக்கு உதவுகிறது. புரோட்டின், இரும்பு சத்து கொண்ட சப்போட்டா பழங்கள் உடலுக்கு புத்துணர்வை தரக்கூடியது. கண்பார்வையை அதிகரிக்கும். தோல் பாதிப்படையாமல் பாதுகாக்கும்.
 
கேன்சரை தடுக்கும் ஆற்றல் உடையது சப்போட்டா. இதுபோன்று உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரவல்ல சப்போட்டா பழங்கள் குறைவான விலைக்கு கிடைக்கின்றன.