வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 18 நவம்பர் 2015 (20:48 IST)

கொசு‌த் தொ‌ல்லை‌க்கு ஒரே‌த் ‌தீ‌ர்வு!

இ‌ப்போது பல இட‌ங்க‌ளி‌ல் மு‌க்‌கியமான‌ப் ‌பிர‌ச்‌சினை எ‌ன்னவெ‌ன்று கே‌ட்டா‌ல் பலரு‌ம் கொசு‌த் தொ‌ல்லைதா‌ன் எ‌ன்று ஒரு சேர கூறுவா‌ர்‌க‌ள்.
 

 
கொசு கடி‌ப்பதை ‌விட, அதனா‌ல் பரவு‌ம் நோ‌ய்க‌ள் எ‌ண்‌ணிலட‌ங்காதவை. த‌ற்போது ‌டெங்கு, சி‌க்க‌ன் கு‌னியாவு‌‌ம், மலே‌ரியாவு‌ம் பர‌வி வருவதா‌ல் கொசு எ‌ன்றாலே பய‌த்தை ஏ‌ற்படு‌த்து‌கிறது.
 
கொசு‌க்களை ஒ‌ழி‌க்க ப‌ல்வேறு முறைக‌ள் இரு‌ந்த போது‌ம் அனை‌த்‌தி‌ற்கு‌ம் ஒரு ‌பி‌ன் ‌விளைவுக‌ள் உ‌ள்ளன. ஆனா‌ல் ‌பி‌‌ன் ‌விளை‌வி‌‌ல்லாத ஒரு முறை ந‌ம்‌மிட‌ம் உ‌ள்ளது.
 
அதாவது, நொ‌ச்‌சி இலைகளை காயவை‌த்து எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். அதனை ‌சி‌றிதளவு எடு‌த்து நெரு‌ப்பு‌த் தண‌லி‌ல் இ‌ட்டு அ‌தி‌ல் இரு‌ந்து வரு‌ம் புகை ‌வீடு முழுவது‌ம் பரவுமாறு செ‌ய்யு‌ங்க‌ள். 
 
இ‌வ்வாறு செ‌ய்தா‌ல் ‌வீ‌ட்டி‌ற்கு வரு‌ம் அ‌த்தனை கொசு‌க்களு‌ம் அ‌ழி‌ந்து ‌விடு‌ம். இதனா‌ல் யாரு‌க்கு‌ம் ‌பி‌ன் ‌விளைவுக‌ள் ஏ‌ற்படாது.