தொடர்புடைய செய்திகள்
- துபாயில் படித்த 18 வயது இந்திய மாணவர் திடீர் மரணம்.. இந்த சின்ன வயதில் மாரடைப்பா?
- நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய திமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்.. மாரடைப்பு என தகவல்..!
- கணவன், மனைவி, ஒன்றரை வயது குழந்தை ரயில்முன் பாய்ந்து தற்கொலை.. செய்தி கேட்ட பாட்டி மாரடைப்பால் மரணம்..!
- இரத்த நாள அடைப்புகளை நீக்கும் ஆஞ்சியோ சிகிச்சை: ஒரு தெளிவான விளக்கம்..!
- கணவருடன் நவராத்திரி நடனமாடிய 19 வயது இளம்பெண் மாரடைப்பால் பலி.. 4 மாதங்களுக்கு முன் தான் திருமணம்..!
நுண்பிளாஸ்டிக் துகள்கள்: இரத்தக் குழாய்களில் படிவதால் மாரடைப்பு, பக்கவாதம் அபாயம் 4.5 மடங்கு அதிகம்!
சுற்றுச்சூழலில் இருந்து மனித உடலுக்குள் நுழையும் மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நானோபிளாஸ்டிக் போன்ற மிக நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இரத்த நாளங்களில் படிவதால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் பல மடங்கு அதிகரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இத்தாலியின் காம்பானியா லுய்கி வான்விடெல்லி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், கழுத்தில் மூளைக்குச் செல்லும் கரோடிட் தமனியில் அடைப்பை நீக்க அறுவைசிகிச்சை செய்த 257 நோயாளிகள் உட்படுத்தப்பட்டனர்.
அவர்களின் தமனிகளிலிருந்து அகற்றப்பட்ட கொழுப்புப் படலங்களில் பாலிவினைல் குளோரைடு உள்ளிட்ட நுண்பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பிளாஸ்டிக் துகள்கள் இருந்தவர்களுக்கு, மாரடைப்பு, பக்கவாதம் அல்லது மரணம் ஏற்படும் அபாயம் மற்றவர்களை விட 4.5 மடங்கு அதிகமாக இருந்தது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த ஆய்வு, பிளாஸ்டிக் துகள்கள் இதய ஆரோக்கியத்தை நேரடியாக அச்சுறுத்துவதைச் சுட்டிக்காட்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
