1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

மாதவிடாய்க்கான காரணங்களும்... தீர்வுகளும்....

பெண்கள் வாழ்க்கையில் மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று. இந்த காலங்களில் அவர்கள் படும் அவஸ்தைகள் ஏராளம். அதில் ஒன்றுதான் இந்த டிஸ்மெனோரியா எனப்படும் மாதவிடாய் வலி!
 

 
வலியில் துடிக்கும் பெண்கள் வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்வது சர்வ சாதாரணமாகி விட்டது. மாதவிடாய் ஆவதற்கு 3,4 நாட்கள் முன்னதாகவே இந்த வலி துவங்கிவிடும். இந்த வேதனை மாதவிடாய் முடியும் வரை நிலைக்கும்.
 
உடல் உழைப்பில்லாத பெண்களை இது அதிகமாக தாக்கும்! எனவே அதிக வேலைகள், உடற்பயிற்சி செய்வதால் இந்த வலி வராது எனலாம்.
 
முதல் குழந்தை பிறக்கும்வரை இந்த வலி இருக்கும்! வலியுடன் சிலருக்கு நடுக்கம், குமட்டல், வாந்தி போன்றவையும் தொடர்ந்து இன்னலை ஏற்படுத்தும்!
 
ஹார்மோன்களை முதன்மையாக கொண்டு சிறிய அளவு கர்ப்பப்பை, ரத்த ஓட்டக்குறைபாடு, பிறப்புறுப்பு பிரச்சனைகள் போன்றவை இதற்கு காரணமாகின்றன.
 
நம் உணவில் பொட்டாசியம், சோடியம் மிகவும் தேவையானது. இவற்றை நாம் உட்கொள்வதால் நம் நரம்பு மண்டலத்தை நன்றாக வேலை செய்ய வைக்கின்றது.
 
தீர்வுகள் என்ன?:
 
சில திருமணம் ஆன பெண்களுக்கு இந்த வலி விரைவாக குறைந்துவிட வாய்ப்பு உள்ளது.
 
எலுமிச்சை சாறு, ஆரஞ்சு, முதலியவற்றை குடிக்கும்போது இந்த வலி குறைந்துவிடும்!
 
சுக்கை நன்றாக பொடியாக்கி அதில் கருப்பட்டி வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை பருகுவதால் இந்த வலி மறைந்துவிடும்.
 
மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு தொடை வலி அதிகமாகவே இருக்கும். அதற்கு வேப்பிலை சாறு, இஞ்சிசாறு சரிவிகிதத்தில் கலந்து அதே அளவு நீருடன் உட்கொண்டால் இந்த மாதிரி தொடைகள் வலிப்பது குறைந்துவிடும்.
 
எந்தவித வலியாகச் இருந்தாலும் அதற்கு மூலகாரணம் என்னவென்று தெரிந்து பின் அதற்கு மருத்துவம் செய்துகொள்ள வேண்டும்!

அக்குபஞ்சர் மருத்துவர் த.நா.பரிமளச்செல்வி: