செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 16 அக்டோபர் 2015 (12:48 IST)

உயிருக்கு உலை வைக்கும் கோபம்

ஒருவருக்கு எதை அடக்க தெரிகிறதோ இல்லையோ கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால் உறவுகளில் விரிசல் ஏற்பட்டு பாதிப்பு வருவது போல அவை உடலிலும் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

கோபத்தினால் மாரடைப்பு, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், சுவாசக்கோளாறு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உடல் நிலையானது மிகவும் மோசமாகி நீங்கள் மரணத்தை சந்திக்க நேரிடும்.

மன அழுத்தம்: அதிகமாக கோபம் வருவதால், மன அழுத்தம் அதிகமாகி அதன் காரணமாக நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற  பிரச்சனைகள் வரும்.

இதய நோய்: கோபம் வரும்போது வரும் படபடப்பு தன்மை இதய துடிப்பை அதிகப்படுத்தி இதயத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி ஆபத்தான விளைவுகளில் முடியும்.

தூக்கமின்மை: கோபம் வரும் போது ஹார்மோன்கள் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் சரியான தூக்கமின்மை, ஓய்வில்லாமையினால் நோய்கள் எளிதாக தாக்கும்.

இரத்த அழுத்தம்: கோபம் வரும் போது உடலில் ரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது  பெரும் அளவில் பாதிக்கப்படும்.

சுவாசக்கோளாறு: ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. அதனால் ஆஸ்துமா  உள்ளவர்கள் அதிகம் கோபப்பட கூடாது. இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

மாரடைப்பு: பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு  அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள்  கூறுகின்றனர்.

மூளை வாதம்: மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள்  வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில  சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.