வியாழன், 13 நவம்பர் 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 அக்டோபர் 2025 (19:00 IST)

சின்ன சின்ன நோய்களுக்க்கு வீட்டிலேயே தீர்வு.. சில பாரம்பரிய குறிப்புகள் இதோ..!

சின்ன சின்ன நோய்களுக்க்கு வீட்டிலேயே தீர்வு.. சில பாரம்பரிய குறிப்புகள் இதோ..!
நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் சிறு சிறு உபாதைகளுக்கு, சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே தீர்வு காண உதவும் சில பாரம்பரிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
 
ஆறாத புண்கள் குணமாக: விரலி மஞ்சளைச் சுட்டு பொடியாக்கி, அதனுடன் தேங்காய் எண்ணெயை கலந்து, ஆறாத அல்லது ஆற நீண்ட நாட்களாகும் புண்களின் மீது காலை மற்றும் இரவு வேளைகளில் தடவி வந்தால், அவை விரைவில் ஆறிவிடும்.
 
உடல் வலி குறைய: சாம்பிராணி, மஞ்சள், மற்றும் சீனி ஆகியவற்றை சேர்த்துக் கஷாயமாக்கி, அதனுடன் பால் மற்றும் வெல்லம் கலந்து பருகினால், உடல் சோர்வு மற்றும் வலி நீங்கி நிவாரணம் கிடைக்கும்.
 
தீக்காயங்களுக்கு முதல் உதவி: நெருப்பு அல்லது சூடான நீர் பட்டதால் ஏற்பட்ட காயங்களின் மீது பெருங்காயத்தை அரைத்து பூசினால், எரிச்சல் உடனடியாக குறைவதுடன், கொப்புளங்கள் ஏற்படுவதையும் தடுக்கலாம்.
 
கர்ப்பிணிகளுக்கான தீர்வு: கேரட் சாறுடன் சிறிது தேன் கலந்து கர்ப்பிணிப் பெண்கள் பருகி வந்தால், அவர்களுக்கு ஏற்படும் வாந்தி நிற்கும், மேலும் உடல் வலுவடையும். இது பித்தம் சார்ந்த நோய்களுக்கும் நல்ல பலன் தரும்.
 
Edited by Mahendran