ஞாயிறு, 16 நவம்பர் 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 அக்டோபர் 2025 (18:30 IST)

திராட்சை விதைகளை இனிமேல் தூக்கி போட வேண்டாம்.. ஏராளமான மருத்துவ குணங்கள்..!

திராட்சை விதைகளை இனிமேல் தூக்கி போட வேண்டாம்.. ஏராளமான மருத்துவ குணங்கள்..!
திராட்சை விதைகளை மூலப்பொருளாக கொண்டு புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் மருந்துகளை பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன. விதைகளில்லா பழங்களைவிட, விதையுள்ள திராட்சை அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
 
திராட்சை விதைகளின் முக்கியப் பலன்கள்:
 
இதில் உள்ள அதிக ஆக்சிஜனேற்றப் பண்புகள் உடலில் உண்டாகும் அழுத்தத்தை எதிர்த்து போராடி வீக்கத்தை குறைக்க உதவுகின்றன.
 
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயம் மற்றும் மூளையின் செயல்பாட்டை பாதுகாக்கும் கூறுகள் இதில் உள்ளன. இது நினைவுத்திறன் இழப்பை கட்டுப்படுத்தவும் உதவும்.
 
காயங்களை விரைவாக ஆற்றும் கொலாஜனை உருவாக்க உதவுகிறது. இதனால் காயங்கள் விரைவில் குணமாகி, தோலின் அழகு அதிகரிக்கும்.
 
முடி உதிர்தலை தடுத்து, அடர்த்தியாக முடி வளர உதவுகிறது.
 
திராட்சை விதை சாறு, உடலில் நுழையும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. தொடர்ந்து உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
 
திராட்சை விதைகளை தூக்கி எறியாமல் உணவில் சேர்ப்பது ஆரோக்கிய வாழ்வுக்கு மிகவும் அவசியம்.
 
Edited by Mahendran