எண்ணெய் வழியும் முகமா? இயற்கை முறையில் எளிய குறிப்புகள்

Caston| Last Modified வெள்ளி, 23 அக்டோபர் 2015 (12:31 IST)
எண்ணெய் வழியும் முகத்தால், வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள், பருக்கள் என பல்வேறு பிரச்சனைகள் வரும். எப்பொழுதும் எண்ணெய் பசையுடன் முகம் காட்சியளிப்பதால் பலருக்கும் தன்னம்பிக்கையே போய்விடும். கடைகளில் கிடைக்கும் இரசாயண பொருட்களினால் அவதியுரும் நபர்களுக்கு இயற்கையான சரும பாதுகாப்பு பொருட்களின் மூலம் நமது ஆரோக்கியம் மற்றும் முகத்தை பாதுகாப்பது பற்றி பார்ப்போம்.

* வெள்ளரிக்காயை துருவி தயிருடன் சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம் வரை ஊற வைத்து பின்னர் அதை குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை மட்டுமின்றி, அழுக்குகளும் முழுவதுமாக நீக்கும்.

* நீர் மற்றும் வெள்ளை வினிகரை சரிசமமாக கலந்து காட்டனில் நனைத்து, முகத்தில் துடைத்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.

* கற்றாழையில் இருக்கும் திரவத்தை முகத்தில் தடவி சிறிது நேரத்திற்கு பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ, முகம் எண்ணெய் பசை மாறி பளிச்சென்று இருக்கும்.

* தக்காளி சாறு மற்றும் தேனை சரிசமமாக கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு பிறகு கழுவ, முகம் எண்ணெய் பசையின்றி பளிச்சென்று இருக்கும்.

* குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்படுவதோடு சருமத்துளைகள் இறுக்கப்பட்டு, எண்ணெய் பசை வெளிவருவதைத் தடுக்கலாம்.

* கொதிக்கும் நீரில் புதினா இலைகளை போட்டு, அந்நீரை குளிர வைத்து, பின்னர் அதனை காட்டன் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்கவும் இது எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.


இதில் மேலும் படிக்கவும் :