வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2015 (15:54 IST)

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே
வருகிறது.  ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதே சர்க்கரை நோய்க்கு காரணம்.

 

 


 
 
ஆப்பிள்
 
தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.  இது நீரிழிவு நோயாளிகளுக்கும்தான்.  ஏனெனில் ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட், கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, செரிமான சக்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 
தர்பூசணி
 
தர்பூசணியில் கிளைசீமிக் இண்டெக்ஸ் அதிகம் உள்ளது.  எனவே இதை மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கும், உடல் வறட்சி தடுக்கபடும்.
 
மாதுளை
 
அழகான சிவப்பு நிறத்தில் உள்ள மணிகளைக் கொண்ட மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக் கூடிய பழங்களுள் ஒன்று.
ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கப் பெரிதும் உதவியாக இருக்கும்.
 
கொய்யா
 
கொய்யாப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது.  இது மலச்சிக்கல் பிரச்சினையை போக்கும்.  அதுமட்டுமன்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின்கள் அதிக அளவிலும், கிளைசீமிக்மி இண்டெல்ஸ் குறைவாகவும் உள்ளன.
 
பெர்ரி 
 
பெர்ரி பழங்கள் சாப்பிடுவது நலலது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு பயமும் இன்றி பெர்ரி பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றைச் சாப்பிடலாம்.  ஆனால் இவற்றை அளவாகச் சாப்பிடுவது ரொம்பவும் நல்லது.
 
செர்ரி
 
செர்ரி பழங்களில் கிளைசீமிக் இன்டெக்சின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத்தான் இருக்கும்.  எனவே இதை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
 
இந்த வகையான பழைங்களை நீரிழிவால் பாதிக்கப்பட்டவர் பயமின்றி சாப்பிடலாம்.