1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (16:44 IST)

சிட்ரஸ் பழங்களுடன் உப்பு சேர்த்து உண்டால் என்னவாகும்??

பழங்களில் சிலர் உப்பை தூவி சாப்பிடுவார்கள். அவ்வாறு சாப்பிடுவதால் பழங்களின் சுவை அதிகரிக்கும். ஆனால் இது உடலுக்கு நன்மையான ஒன்றா என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். 
 
# பழங்களை பிரஷ்ஷாகவும், பழங்களில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உப்பு உதவும். 
# சிட்ரஸ் பழங்களுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமநிலையாக்குவதோடு, செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். 
# புளிப்புச் சுவையுள்ள பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், அந்த பழங்களின் புளிப்பு குறைந்து சுவையாக இருக்கும்.  
# காயாக இருக்கும் பழங்களை சாப்பிடும் போது, அதில் உள்ள பச்சை வாசனை வராமல் இருப்பதற்கு உப்பை தூவி சாப்பிடலாம்.