அடிக்கடி கார்ன் சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடா?

Sugapriya Prakash| Last Modified புதன், 30 செப்டம்பர் 2020 (13:01 IST)
சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. 

# சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.   
 
# சோளத்தில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தயாமின் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துக்கள் இந்த சோளத்தில்  இருக்கின்றன. 
 
# கருவுற்ற பெண்கள் மருத்துவர் அறிவுறுத்திய அளவின்படி சோளம் சாப்பிட்டு வருவது அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் உதவுகிறது. 
 
# சராசரி உடல் எடைக்கு குறைவாக இருப்பவர்கள் சோளத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கூடிய விரைவில் திடலாத்திரமான எடையை  பெற முடியும். 
 
# இரும்புச்சத்து அதிகம் உள்ள சோளத்தை சாப்பிட்டு வருபவர்களின் உடலில் சிவப்பு இரத்த  அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை குறைபாடு நீங்கும்.
 
# சோளத்தில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் காக்கப்படுவதோடு, சுருக்கங்கள்  ஏற்படுவதை தாமதிக்கிறது.  
 
# சோள மாவை தண்ணீர் அல்லது சிறிது பால் கலந்து நன்றாக முகத்தில் பூசி கொண்டு, சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி வர முகப்பரு தழும்புகள் எண்ணெய் வழிதல் போன்ற குறைபாடுகளை சரியாகும். 


இதில் மேலும் படிக்கவும் :