1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

இரத்த சோகையை போக்கிடும் - வெல்லம்

இரத்தசோகையால் ஆயிரக்கணக்கான பருவப் பெண்களும், கர்ப்பிணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரத்தசோகையைக் குறைக்கும் ஆற்றல் நிறையவே வெல்லத்தில் உண்டு.


 


இரும்புச் சத்துக் குறைவுதான் இரத்தசோகைக்கு முக்கியக் காரணம், உடல் வெளுக்கும், நகமும் வெளுக்கும். முகம் வீங்கும். கண் இமை மற்றும் உள் உதடுகளில் வெண்படலம் தெரியும். அடிக்கடி மூச்சுத் திணறும். கை, கால் வலிக்கும். இவை எல்லாம் முக்கிய அறிகுறிகள்.
 
பனைவெல்லத்தைவிடவும், கரும்பில் இருந்து எடுக்கப்படும் வெல்லத்தில் இரும்புச் சத்து அதிக அளவில் உண்டு. 100 கிராம் வெல்லத்தில் 2.64 மில்லி கிராம் இரும்புச் சத்தும், 80 மில்லி கிராம் கால்ஷியமும் உள்ளது. இரண்டும் சேரும் போது உடலுக்கு நல்ல வலு கிடைக்கும்.

இது தவிர பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் ஆகியவையும் வெல்லத்தில் உண்டு.
 
பெண்களுக்கு மாதவிடாயின் போது சோர்வாகவும், பட்படப்பாகவும் இருக்கும். அந்த நிலையில் வெல்லம் சாப்பிட்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம்.
 
பித்தம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தை துணை மருந்தாக தரலாம். வெல்லத்தை சமையலில் பயன்படுத்தும்போது சுவை அதிகரிக்கும்.
 
ஓமம், மிளகு, வெல்லம் மூன்றையும் சம அளவில் எடுத்துப் பொடி செய்து, காலை மற்றும் இரவு அரைத் தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், வயிற்றுக் கடுப்பு தீரும் குடல் புழுக்களைக் கட்டுப்படுத்த அதிகாலையில் வெல்லத்தை சிறிது அளவு உட்கொள்ளலாம்.