தாய்ப்பால் கொடு‌ங்க‌ள்.. இதய‌ம் பலமாகு‌ம்

Webdunia|
தா‌ய்‌ப்பா‌லகொடு‌ப்பதா‌லதா‌‌யி‌னஇதய‌மபல‌மாகு‌மஎ‌ன்று‌ம், இதய‌மச‌ம்ப‌ந்த‌ப்ப‌‌ட்நோ‌ய்க‌ளவராதஎ‌ன்று‌மபு‌திய ‌ஆ‌ய்வதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

குழந்தைக்கு தா‌யபா‌லகொடு‌த்தா‌ல், தனதஅழகு குறைந்துவிடும் என்று கருதி சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடு‌க்கு‌மஅவல‌மஇ‌ன்னு‌மநட‌ந்தகொ‌ண்டதா‌னஉ‌ள்ளது.
தாய்ப்பால் ஒரு அருமரு‌ந்தாகு‌ம். அ‌தி‌ல் இல்லாத சத்துகளே கிடையாது, தா‌ய்‌ப்பாலு‌க்கு ஈடு இணையான ஒரு உணவு உலக‌த்‌திலேயே வேறு எதுவு‌ம் இ‌ல்லை, அதைக் கொடுப்பதால் தாய்க்கு எந்த பாதிப்பும் கிடையாது, சொ‌ல்ல‌ப் போனா‌ல் பலனே அ‌திக‌ம் என்று மரு‌த்துவ‌ர்க‌ள் அறிவுரை கூறினாலும், அதை கா‌தி‌ல் வா‌ங்‌கி‌க் கொ‌ள்வதே இ‌ல்லை.
இதற்கிடையில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கின்றன என்கிற கோணத்தில் ஆய்வுக‌ள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கி‌ன்றன.

அந்த வகையில் அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்று சில வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

பாலூட்டுவதால் ஒரு குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவையான அளவில் கிடைப்பதுடன், அந்த குழந்தைக்கும், அதன் தாய்க்கும் இடையே ஒரு பாசப்பிணைப்பை ஏற்படுத்துகிறது.
அத்துடன், பாலூட்டுவதால் அந்த தாய்க்கு பிற்காலத்தில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், காக்காவலிப்பு போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைகின்றன என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள்.

ஒரு வருடம் வரை தொடர்ந்து தனது குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த பலன் அதிக அளவில் கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :