உடல் எடையும், எதிர்ப்புணர்வும்

Webdunia| Last Modified செவ்வாய், 3 மார்ச் 2009 (17:17 IST)
எதிர்ப்புணர்ச்சியுள்ள அல்லது பகைமை உணர்வு அதிகம் உள்ளவர்களின் உடல் எடையானது, காலப்போக்கில் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு எதிர்ப்புணர்வு குறைவாக உள்ளவர்களைக் காட்டிலும் உடல் எடையானது தொடர்ந்து அதிகரிக்கும் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது.

ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வின்படி, எதிர்ப்பு அல்லது பகைமை, விரோதம் கொண்டவர்களுக்கு இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அதுபோன்றவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படக்கூடிய ஆபத்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 35 வயது முதல் 55 வயதுடையவர்கள் சுமார் 6 ஆயிரத்து 484 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் உடல் எடைக்கும், உயரத்திற்கும் இடையேயான விகிதம் (Body Mass Index) குறித்த தகவல் வெளியானது.
ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல், அதிக எதிர்ப்பு உணர்ச்சியைக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் உடல் எடை உயரத்திற்கும் மேலாக அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :