சியோமி தீபாவளி சலுகை: ரூ.1-க்கு ஸ்மார்ட்போன்!!!

Sugapriya Prakash| Last Modified புதன், 12 அக்டோபர் 2016 (13:34 IST)
சியோமி நிறுவனம் அக்டோபர் 17 முதல் அக்டோபர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் விற்பனை திருவிழாவில், பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடியினை வழங்குகிறது.

 
பயனர்கள் கோ ஸ்மாஷ் விளையாடி சலுகை கூப்பன்களை பெறலாம். அக்டோபர் 17 முதல் 19 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பயனர்கள் ரூ.100 முதல் ரூ.500 வரை கூப்பன்களை வெல்ல முடியும்.
 
மேலும், இதில் தேர்வு செய்யப்பட்ட கருவிகள் ரூ.1-க்கு வழங்கப்படும் பிளாஷ் விற்பனை முறையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பிளாஷ் விற்பனையானது, அக்டோபர் 17 முதல் அக்டோபர் 19 ஆம் தேதி வரை தினமும் மதியம் 2 மணிக்குத் துவங்கும், இதில் ரெட்மி 3எஸ் பிரைம், எம்ஐ ப்ளூடூத் ஸ்பீக்கர், ரெட்மி நோட் 3, பவர் பேங்க், எம்ஐ 4 மற்றும் எம்ஐ பேண்ட் 2 போன்ற கருவிகளை பயனர்கள் ரூ.1 மட்டும் செலுத்தி வாங்க முடியும்.
 
எம்ஐ லாப்டாப் ஸ்டிக்கர் ஒன்றும் எம்ஐ கீ செயின் ஒன்றும் வழங்கப்படுகின்றது. மேலும் எம்ஐ யுஎஸ்பி ஃபேன் ஒன்றும் வழங்கப்படுகின்றது. எம்ஐ ப்ரோடெக்ட் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் ரூ.300-க்கு வழங்கப்படுகின்றது. இத்துடன் எம்ஐ 5 கருவியினை தவனை முறையில் வாங்கும் போது 0% வட்டி முறை வழங்கப்படுகின்றது.
 
எம்ஐ மேக்ஸ் கருவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


இதில் மேலும் படிக்கவும் :