வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 14 அக்டோபர் 2015 (22:19 IST)

4ஜி சேவையை வழங்க தயராகும் வோடோஃபோன்

இந்த வருடத்திற்குள் 4ஜி சேவையை  தொடங்க உள்ளதாக வோடோஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.
 

 
தனியார் செல்போன் நிறுவனங்களில் வோடோஃபோன் நிறுவனம்முதன்மை நிறுனமாக திகழ்ந்து வருகிறது. செல்போன் நிறுவனங்கள் முதலில் 2ஜி சேவையை மக்களுக்கு அளித்தது. பின்பு 3ஜிக்கு மாறி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
 
தற்போது, மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக செல் போன் நிறுவனங்கள் 4ஜி சேவை வழங்க முயற்சி செய்து வருகிறது.இதன் முதல் கட்டமாக பெங்களூரு, மைசூர், மங்களூர் மற்றும் ஹுப்லி ஆகிய நகரங்களில் 4 ஜி சேவையை தொடங்க உள்ளது.
 
இது குறித்து, வோடோஃபோன் இயக்குநர்களில் ஒருவரான சுரேஷ் குமார் கூறுகையில், 4ஜி சேவை சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. எனவே, உலகின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு சேவை நிறுவங்களோடு இணைந்து 4ஜி சேவையை வோடோஃபோன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது என்றார்.