வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2016 (11:58 IST)

புதிய டைனமைட் மோட்டோ G4 அறிமுகம்

மோட்டோரோலா தனது அசத்தலான அடுத்த ஸ்மார்ட்போன் டைனமைட் மோட்டோ G4 என்ற போனை அறிமுகம் செய்யவுள்ளது.


 

 
மோட்டோரோலா ஸ்மார்ட்போன் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சந்தைக்கு வந்ததில் இருந்தே, அந்த நிறுவனம் இந்தியாவில் வலுவான அடிப்படையை பெற்றுள்ளது. மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்த பெரும்பாலான ஸ்மார்ட்போன் வெற்றிப் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் டைனமைட் மோட்டோ G4 ஸ்மார்ட்போனை வெளியிட தயாராக உள்ளது.
 
மோட்டோ G4 ஸ்மார்ட்போன் 5.5 அங்குல திரை(5.5 Inches Display), 9.8- மிமீ தடிமனும்(9.8mm Thickness), 155g எடையுள்ளதாகவும்(155g Weight), பவர் மற்றும் வால்யூம் கீய்ஸ்(Power and volume keys) வலது புறமாகவும், மைக்ரோ யூஎஸ்பி(Micro USB) மேல் புறமாகவும், இயர் போன்சாக்கெட்(Earphone Socket) கீழ் புறமாகவும் இடம்பெறுள்ளது. மேலும் மென்மையான முனைகள் கொண்ட எளிய உடல் வடிவமைப்பு கொண்டு இருக்கிறது.
 
இதை தவிர்த்து 2ஜிபி ரேம்(2GB RAM), கைரேகை சென்சார்(Fingerprint Sensor), 16 ஜிபி இன்டர்னல் சேமிப்பு(16GB Internal Storage), சக்திவாய்ந்த 3000 mAh திறன் கொண்ட பேட்டரி(3000 mAh Battery) 13 மெகாபிக்சல்  பின்புற கேமரா(13 Megapixel rear camera) மற்றும் 5 மெகாபிக்சல் முன் கேமரா ஃபிளாஷ்(5 Megapixel back camera, Flash) ஆகிய அம்சங்களை பெற்றுள்ளது. 
 
இதில் நீங்கள் கூகுல் போட்டோஸை(Google Photos) பயன்படுத்தலாம். டர்போ சார்ஜர்(Turbo Charger) வசதிகள் பெற்றுள்ள மோட்டோ G4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499 மட்டுமே.