வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (11:47 IST)

எஸ்.பி.ஐ-யில் ஏ.டி.எம். மிஷினில் தனிநபர் கடன் பெறும் திட்டம் அறிமுகம்

இந்தியாவில் சிறந்த வங்கி சேவையை செய்து வரும் எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஏ.டி.எம். மிஷினில் தனிநபர் கடன் பெறுவதற்கான வசதியை எஸ்.பி.ஐ புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.


 
 
இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் குறைந்தளவிலான கடனை பெற்று கொள்ளலாம். இதில், ஏ.டி.எம். மிஷினில் இருந்து பணம் எடுத்தவுடன் தனிநபர் கடனுக்கான வழிமுறைகள் தோன்றும். இந்த வழிமுறைகளை பின்பற்றி வாடிக்கையாளர்கள் தங்கள் வருமானம், கடன்தொகை, கடனை திருப்பி செலுத்தும் முறை ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளலாம்.
 
அதன்பின்பு, திரையில் தோன்றும் விதிகளுக்கு ஒப்புதல் அளித்தவுடன் தகவல்கள் சரிபார்ப்பதற்காக மொபைல் எண்ணை திரையில் பதிவு செய்ய வேண்டும். தகவல் பதிவுகள் முடிந்தவுடன், வாடிக்கையாளர்களின் கணக்கில் பணம் சேர்ந்துவிடும்.
 
விடுமுறை நாட்களில் கூட வாடிக்கையாளர்கள் கடன் பெற்று கொள்ளலாம். முதல் கட்டமாக இந்த வசதியை நாடு முழுவதுமும் கிட்டதட்ட 50,000ம் மையங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.