வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (16:32 IST)

சாம்சாங் நோட் 7 வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு......

சாம்சங் கேலக்ஸி நோட் 7 கடந்த ஆகஸ்ட் மாதம் உலகளாவிய 19 சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டது. அதில் தென் கொரியாவும் ஒன்று.


 
 
தென் கொரியா நாட்டை செர்ந்தவர் பார்க் ஸீ ஜங். அவர் நோட் 7 ஸ்மார்ட் போனை வாங்கி பயன்படுத்தி வந்தார். அதனை உபயோகித்த சில நாட்களிலெயே அதனை பற்றி அதிர்ச்சி தரும் சம்பவத்தை பதிவு செய்து உள்ளார். சாம்சங் நோட் 7 மொபைல் பேட்டரி சரியில்லாத காரணத்தினால் மொபைல் சார்ச் ஆகும் போது வெடித்து அறை முழுவதும் புகை சூழ்ந்தது என கூறிப்பிட்டிருந்தார்.
 
அவரின் இந்த பதிவு, தென் கொரியா நாட்டின் யோன்ஹாப் செய்திகளில் வெளியானது. சாம்சங் நிறுவனம் தனது முழு கட்டணத்தையும்($269) இழப்பீடாக வழங்கினர், ஆனால் அதை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
 
இதே போல் 6-7 போன்கள் வெடித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றனர். சாம்சங் நிறுவன அதிகாரிகள் இது குறித்து ஆலோசனை நடத்தி, விரைவில் தீர்வு காணப்படும் என அறிவித்துள்ளனர்.