வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2016 (13:23 IST)

ஒரே மாதத்தில் 16 மில்லியன் பயனர்கள்: ஜியோ சாதனை

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரே மாதத்தில் 16 மில்லியன் பயனர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது என்று அறிவித்துள்ளது.

 
4ஜி சந்தையில் புதிதாக கலம் இறங்கி வேகமாக வளர்ந்து வரும் ஜியோ நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ் அப், ஸ்கைப் போன்ற நிறுவனங்களை விட மிக வேகமாக வளர்ந்து வருவதாக அறிவித்துள்ளது.
 
செப்டம்பர் 5 முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சேவையில் இன்று வரை 16 மில்லியன் பயனர்கள் இணைந்து உள்ளனர்.
 
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42-வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி 100 மில்லியன் பாயனர்களை எட்டுவதே எங்கள் இலக்கு என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், 3,100 நகரங்களில் ஜியோ சிம் பேப்பர் இல்லாமல் ஆதார் அட்டை மூலம் சிம் கார்டுகளை ஆக்டிவேஷன் செய்யும் முறையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
 
4ஜி சேவையில் தனது சோதனை முயற்சியிலேயே 1.5 மில்லியன் பயனர்களுடன், உலகின் இரண்டாம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இந்நிறுவனம் மாறியுள்ளது. 
 
இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்கி வரும் நிறுவனமான ஏர்டெல் 275.5 மில்லியன் பயனர்களுடனும், வோடாஃபோன் நிறுவனம் 200 மில்லியன் பயனர்களுடனும், ஐடியா நிறுவனம் 177 மில்லியன் பயனர்களுடனும், ஏர்செல் நிறுவனத்தில் 89.7 மில்லியன் பயனர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.