வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2016 (11:33 IST)

ரூ.1,34,000 கோடி முதலீட்டில் ரிலையன்ஸ் 'ஜியோ' உருவாக்கத்தின் பிண்ணனி என்ன???

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 1 ரூபாய் கடன் கூட இல்லாமல் சுமார் 2,000 கோடி ரூபாய் நிதி இருப்புடன் சிறப்பான நிலையில் இருந்தது. இதனாலேயே இந்திய வர்த்தகச் சந்தையில் இந்நிறுவனத்திற்குத் தனி மதிப்பு இருந்து வருகிறது.


 
 
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பிளாஸ்டிக், பாலிமர் உற்பத்தியை முக்கிய வர்த்தகமாகக் கொண்டு இயங்கி வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெலிகாம் துறையில் 1,34,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஜியோ நிறுவனத்தை உருவாக்கியது.
 
நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் திருபாய் அம்பானியின் மறைவிற்குப் பின் இரு பரிவுகளாகப் பிரிந்தது ரிலையன்ஸ். இதில் மூத்த பிள்ளையான முகேஷ் அம்பானி கையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு முதல் பிளாஸ்டிக் உற்பத்தி வரையிலான வர்த்தகம் வந்தது.
 
2,000 கோடி ரூபாய் நிதி இருப்பில் செழிப்பான நிலையில் இருந்தது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். 6 வருடங்களுக்கு முன்பு இன்போடெல் பிராட்பேண்ட் நிறுவனத்தில் 95 சதவீத முதலீட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்கத் துவங்கியது. இதன் பின்னர் டெலிகாம் பிரிவிலும் தொடர்ந்து அதிகளவிலான முதலீட்டைச் செய்யத் துவங்கியது.
 
வளரும் நாடுகளில் பலதுறை நிறுவனங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் வளர்ச்சி அடையாமல் சரிவை நோக்கி பயணம் செய்யத் துவங்கும். இத்தகைய சூழ்நிலையில் இந்த நிறுவனங்கள் புதிய வர்த்தகத்தை நோக்கி தனது புதிய பயணத்தைத் துவங்கும். இத்தகைய பயணத்தைத் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் துவங்கியுள்ளது.
 
கடந்த 7 வருட வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்தகளின் பங்குகள் இந்திய சந்தையில் ஒரு தேக்க நிலையை அடைந்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் தான் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரீடைல் வர்த்தகத்தில் தனது கால்தடத்தைப் பதித்தது. 
 
ரிடைல் வர்த்தகத்தில் போதுமான வர்த்தகத்தையும் லாபத்தையும் பெற முயற்சி செய்து வரும் சூழ்நிலையில், ரிஸ்க் என்றாலும் பாதாளத்தில் வழும் அளவிற்கு ரிஸ்க் இல்லை என்ற எண்ணத்தில் டெலிகாம் துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இறங்கியுள்ளது.
 
ஒரு நிறுவனம் தனது வர்த்தகப் பிரிவுகளை அதிகளவில் பிரிந்து வெற்றி பெறும்போது நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்கள், பங்குதாரர்களின் முதலீட்டின் மதிப்பும் மிகப்பெரிய அளவில் உயரும் என்பது ரிலையன்ஸ் போட்டுள்ள கணக்கு.