வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 29 டிசம்பர் 2015 (17:13 IST)

டெபிட், கிரெடிட் கார்டு கட்டணங்களை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி பரிந்துரை

கூடுதல் ஏடிஎம்-கள் அமைக்கவும், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களை ரத்து செய்யவும் ரிசர்வ் வங்கி குழு பரிந்துரை செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குனர் தீபக் மொகந்தி தலைமையிலான இந்தக் குழு, தனது அறிக்கையை இன்று தாக்கல் செய்திருக்கிறது.


 



இந்த பரிந்துரையில், வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரின் செல்ஃபோன் எண்ணை எளிதான படிவம் மூலம் பதிவு செய்வதை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
 
செல்ஃபோன் வங்கிச் சேவைக்கான தொழில்நுட்பங்களை விரிவுபடுத்த வலியுறுத்தியுள்ள ரிசர்வ் வங்கி குழு, பெண் குழந்தைகளுக்கான டெபாசிட் திட்டத்தை சமூக நலன் கருதி அரசே தொடங்க வேண்டும் என்றும் பெண்கள் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்க சிறப்பு முயற்சிகள் அவசியம் என்றும் ரிசர்வ் வங்கி குழு வலியுறுத்தியுள்ளது.