நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்


Suresh| Last Updated: வெள்ளி, 20 நவம்பர் 2015 (07:49 IST)
சென்னை உட்பட நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் 17 ஆயிரம் பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 
ரிசர்வ் வங்கியின் அதிகாரங்களை குறைக்க புது அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாடு முழுவதும் நவம்பர் 19 ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
 
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 23 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் பணிபுரியும் 17 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
சென்னை மண்டலத்தில் 1,300 ஊழியர்கள் அலுவலகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ரிசர்வ் வங்கி பாதுகாப்பு பிரிவினர் மட்டும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :