வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 9 ஜூன் 2016 (10:59 IST)

'இவர் இந்தியக் குடிமகன் தான்’ - அடித்துச் சொல்லும் ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி நிர்வாகம், அதன் ஆளுநர் கவர்னர் ரகுராம் ராஜன் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்; அவர் இந்தியக் குடிமகன் என்று தெரிவித்துள்ளது.
 

 
ஆகஸ்ட் 12, 2013 அன்று வந்த செய்தியில் ரகுராம் ராஜனின் குடியுரிமை பற்றிய சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு முன்னரே ரகுராம் ராஜனின் குடியுரிமை குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரப்பட்டிருந்தது.
 
இதற்கு பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி நிர்வாகம், ரகுராம் ராஜன் இந்தியக் குடியுரிமை பெற்றவர் என்று தெரிவித்துள்ளது. ஆனால் அவர், கடந்த காலகுடியுரிமை பற்றி எதுவும் தெரியாது என்று கூறியுள்ளது.
 
தனது ஆர்டிஐ மனு குறித்து விளக்கிய புதுடெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர்வால், ’எனது ஆர்டிஐ மனு பல அரசு அலுவலகங்கள், அதிகாரிகள் கையில் மாறி மாறி சென்று கடைசியாக மே 11 அன்று ரிசர்வ் வங்கியிடம் போய்ச் சேர்ந்துள்ளது’ என்றார்.