வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 4 பிப்ரவரி 2016 (14:46 IST)

தகவல் தொழில்நுட்ப துறையில் உலகின் சக்தி வாய்ந்த நிறுவனமாக டிசிஎஸ் தேர்வு

இந்தியாவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான டிசிஎஸ்(டாட்டா கன்சல்டல்சி நிறுவனம்) உலகின் சக்தி வாய்ந்த ஐடி பிராண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.


 

 
உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்களை பிராண்ட் பைனான்ஸ் என்ற நிறுவனம் மதிப்பீடு செய்து, அவற்றில் உலகின் சக்தி வாய்ந்த மற்றும் மதிப்புமிக்க நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுகிறது.

அதன்படி, 2016 ஆம் ஆண்டுக்கான தரப்பட்டியலில் ஐடி துறையில் உலகின் சக்தி வாய்ந்த பிராண்டாக டிசிஎஸ் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது.
 
பிராண்ட் பைனான்ஸஸின் மதிப்பீட்டின்படி டிசிஎஸ் நிறுவனம் 78.3 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
 
வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துதல், மற்றும் பணியாளர்களின் மனநிறைவு ஆகியவைகளில் டிசிஎஸ் நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்று பிராண்ட் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
 
இந்த ஆண்டின் மதிப்புமிக்க பிராண்டாக ஆப்பிள் நிறுவனம் தேர்வாகியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.