வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2016 (15:32 IST)

ஸ்னாப்டீல் மூலம் இனி பயணச்சீட்டு மற்றும் உணவு பெறலாம்

ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஸ்னாப்டீல் மூலம் இனி பயனாளர்கள், பயணச்சீட்டு புக்கிங் வசதி மற்றும் உணவு டெலிவரி போன்றவற்றை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 
 
இந்தியாவில் இரண்டவது பெரிய நிறுவனமன ஸ்னாப்டீல், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம் சோமேடோ மற்றும் கிளியர்டிரிப், ரெட்பஸ் ஆகிய ஆன்லைன் பயணம் மற்றும் பயணச்சீட்டு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட ஒப்பந்தம் செய்து உள்ளது.
 
மூன்று நிறுவனங்களும் தங்களுடைய அப்ளிகேஷன் புரோகிராம் இன்டர்பேஸ்-ஐ ஸ்னாப்டீல்-வுடன் பகிரிந்துள்ளது. இதன் மூலம் ஸ்னாப்டீல் பயனர்கள் உணவு மற்றும் பஸ், விமான டிக்கெடை புக்கிங் செய்ய முடியும்.
 
இந்த ஒப்பந்தம் ஸ்னாப்டீல் மற்றும் மூன்று நிறுவனங்களும் மேலும் வளரவும் பயனர்களை அதிகரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஒவ்வொரு நாளும் சோமேடோ நிறுவனம் 20,000 டெலிவரி செய்வதாகவும், மேலும் இந்த ஒப்பந்தம் முறை இரண்டு மடங்கு வளர உதவும் என தெரிவித்துள்ளது.