நோக்கியாவின் பிரம்மாண்ட ரீ எண்டரி: 3, 5, 6 என அசத்தல்!!


Sugapriya Prakash| Last Modified புதன், 1 மார்ச் 2017 (10:13 IST)
நோக்கியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன்களான நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 ஆகிய போன்கள் அறிமுகமாயின.

 
 
நோக்கியாவின் பழைய மாடலான 3310 மற்றும் புதிய ஸ்மார்ட் போன்களான நோக்கியா 3, 5, 6 ஆகியவையும் இந்திய சந்தையில் வரும் ஜுன் மாதம் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
நோக்கியா 6: 
 
# 5.5 இன்ச் முழு HD திரையுடன்கூடிய கொரில்லா கிளாஸ், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 430 ப்ராசசர் உடன் 4 ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி ரோம் கொண்டது.
 
# 16 மெகா பிக்சல் பின்புற கேமராவை, 8 மெகாபிக்சல் முன்புற கேமரா கொண்டுள்ளது. 
 
# இரண்டு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளதால், மிகச் சிறந்த ஒலியைக் கேட்க முடியும். மேலும், ஒலிபெருக்கிகள் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்தில் இயங்குவதால், 3டி ஒலியைத் துல்லியமாகக் கேட்க முடியும்.  
 
# மேட் ப்ளாக், சில்வேர், டேம்பேர்ட் ப்ளூ மற்றும் காப்பர் நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நோக்கியா 6-ன் விலை தோராயமாக 16,000 ரூபாய் இருக்கலாம்.
 
நோக்கியா 5: 
 
# 5.2 இன்ச் HD IPS திரையையும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 ப்ராசசர் உடன் 2 ஜிபி ராம், 16 ஜிபி ரோம் கொண்டது.
 
# 13 மெகா பிக்சல், 8 மெகா பிக்சல் பின்புற மற்றும் முன்புற கேமெரா கொண்டுள்ளது. கூகுளின் பிரத்யேக அசிஸ்டன்ட் இதில் இயங்கும்.
 
# மேட் ப்ளாக், சில்வர், டேம்பேர்ட் ப்ளூ மற்றும் காப்பர் நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நோக்கியா 5 விலை, தோராயமாக 13,000 ரூபாய் இருக்கும். 
 
நோக்கியா 3: 
 
# பாலிகார்போனேட் மற்றும் அலுமினியத்திலான கட்டமைப்புடன் கூடிய  5 இன்ச் திரையையும் மீடியாடேக் 6737 ப்ராசசர் உடன் 2 ஜிபி ராம், 16 ஜிபி ரோம் கொண்டது.
 
# 8 மெகாபிக்சல் முன்புற மற்றும் பின்புற கேமரா கொண்டுள்ளது. 
 
# இதன் விலை, தோராயமாக 9,500 ரூபாய் இருக்குமென்று கருதப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :