வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (13:49 IST)

சார்ஜிங் ப்ராப்லம் இனி இல்ல... டைப் சி சார்ஜருடன் வரும் ஐபோன்!

அதிக எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஐபோன் 11 டைப் சி சார்ஜர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆப்பிள் நிறுவம் 2019 ஆம் ஆண்டில் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என மூன்று மாடல் ஐபோன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. 
 
இந்த ஐபோன் சீரிஸில் 5 வாட் சார்ஜருக்கு மாற்றாக யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜர் வழங்கப்படலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. புதிய ஐபோன் யு.எஸ்.பி. டைப் சி போர்ட்டில் இருந்து லைட்னிங் கேபிள் இணைப்பு வழங்கப்படலாம் என்பது கூடுதல் தகவல். 
இதற்கு முன்னர் ஐபோன் XS மற்றும் ஐபோன் XR மாடல்களுடன் யு.எஸ்.பி. டைப் சி சார்ஜரை வழங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம்போல் யு.எஸ்.பி. டைப் ஏ போர்ட்தான் வழங்கப்பட்டது.  
 
சமீபத்திய ஐபேட் ப்ரோ மாடல்கள் யு.எஸ்.பி. டைப் சி சார்ஜர் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.