வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (14:01 IST)

ஆன்லைன் ஷாப்பிங்... உண்மை பின்னணி என்ன??

தற்போதைய டிஜிட்டல் உலகில் வாங்க வேண்டிய பொருளின் தரம், விலை, ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்து ஆன்லைனிலேயே ஆர்டர் செய்கிறோம்.

 
ஆனால் ஒரு பொருளை ஆன்லைனில் தேர்வு செய்து க்ளிக் செய்தவுடன் அந்தப் பொருள் வருவதற்குள் எத்தனை பிராசஸ் நடக்கின்றது என்பதை தெரிஞ்கோங்க.....
 
ஆன்லைன் பர்சேஸ்:
 
ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று முடிவு செய்து Buy Now என்ற பட்டனை க்ளிக் செய்தவுடன் உடனடியாக பின்கோட் நம்பர் சரிபார்க்கப்படுகிறது. 
 
பின்னர் அந்தப் பின்கோடு நம்பர் பகுதிக்கு அருகில் இருக்கும் குடோனுக்கு அந்தத் தகவல் உடனடியாக அனுப்பப்படுகிறது.
 
தேர்வு செய்த பொருளை குடோனில் உள்ள ஊழியர்கள் சரிபார்த்து, பின்னர், அந்தப் பொருளை பேக்கேஜிங் செக்சனுக்கு அனுப்புவார்கள். பாதுகாப்பான முறையில் பேக்கேஜ் செய்யப்பட்டவுடன் அந்தப் பொருள் டெலிவரி செக்சனுக்குச் செல்லும். 

பேக்கிங் சிஸ்டம்: 
 
ஒவ்வொரு பொருளும் அதன் எடைக்குத் தகுந்த பாதுகாப்புடன் பேக் செய்யப்படும். பின்னர், ஆர்டர் வந்த தேதியின் வரிசைப்படி வைக்கப்படும். இந்தியாவில் இந்தப் பிராசஸ் அனைத்துமே ஆட்டமெட்டிக் முறையில் செய்யப்படுகின்றது.
 
ஒவ்வொரு பொருளும் அதன் எடைக்கேற்ப கன்வேயர் பெல்ட் மூலம் அந்தந்த பின்கோடுக்குரிய இடத்திற்கு ஆட்டமெட்டிக்காகக் கொண்டு சேரும் வகையில் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
டெலிவரி செக்சன்: 
 
பொருள் பாதுகாப்பான முறையில் டெலிவரி செக்சனுக்குச் சென்ற பின்னர்ச் செண்ட்ரல் ஹப் என்று சொல்லக்கூடிய முக்கியப் பகுதியில் உள்ள ஏரியாவின் பின்கோட் நம்பருக்கு உரிய இடத்தில் வைக்கப்படும்.
 
பேக்கிங் தரத்தை சோதனை செய்த பின்னர் பின்கோட் நம்பர் முகவரிக்கு டெலிவரி செய்ய சரியான வழி எது என்பது  ஆராயப்படும்.
 
டெலிவரி முறை: 
 
குடோனில் அனைத்து வித செக்கப்களும் முடிந்த பின்னர் டெலிவரி ஊழியரிடம் பொருள் ஒப்படைக்கப்படும். இதற்கென உருவாக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் உதவியால் குடோனில் இருந்து டெலிவரி செய்யப்படும். 
 
பின்கோட் முறை: 
 
ஒவ்வொரு ஆர்டரும் எந்தப் பின்கோட் நம்பரில் இருந்து வந்துள்ளது என்பதை அறிந்து அவை ஒவ்வொன்றாக அனுப்பி வைக்கப்படும். 
 
பார்கோட்:
 
குடோனில் இருந்து ஆர்டர் வந்த பொருள் டெலிவரி செய்யப்படுவதற்கு முன்னர்க் கம்ப்யூட்டர் ஸ்கேனிங் மூலம் சரிபார்க்கப்படுகிறது. மேலும் டெலிவரி செய்வதற்கு முன்னர்த் தயாரிப்பு நிறுவனங்களின் பார்கோட் சரிபார்க்கப்பட ஸ்கேன் செய்யப்படுகிறது.
 
ஆர்டர் அளித்தவுடன், ஆர்டரில் அந்தப் பொருளின் பார்கோடு ஆட்டமெட்டிக்காகப் பதிவு செய்யப்பட்டுவிடும். பின்னர் டெலிவரி செய்யும்போது ஸ்க்ரீனில் ஆர்டர் காப்பியில் உள்ள பார்கோடும், டெலிவரி செய்யப்படும் பொருளில் உள்ள பார்கோடும் சரிபார்க்கப்படும். 
 
மேப்பிங் டெக்னாலஜி:
 
ஆர்டர் செய்யும்போது கொடுத்த முகவரி மற்றும் பின்கோடு நம்பர் மேப்பிங் டெக்னாலஜி மூலம் சரிபார்க்கப்படுகிறது. முகவரி ஒருவேளை சரியானதாக இல்லையென்றால் மேப்பிங் டெக்னால்ஜி மூலம் கண்டுபிடிக்கப்படும். 
 
மேல் உள்ள அனைத்து பிராசஸ்களும் ஒவ்வொன்றாக முடித்த பின்னர் ஆர்டர் செய்த பொருள் நியமனம் செய்யப்பட்ட டெலிவரி பாய் மூலம் வந்து சேரும்.