சிறு சேமிப்பிலும் கை வைத்த மத்திய அரசு: என்னதான் திட்டம்?


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 23 டிசம்பர் 2016 (19:24 IST)
வருங்கால வைப்பு நிதி திட்டங்களின் வட்டி விகிதத்தைக் குறைத்ததை அடுத்து தற்போது சிறு சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தையும் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 
ஒரு வாரத்திற்கு முன் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ஆணையம் 2015-2016 நிதி ஆண்டிற்கான வட்டி விகிதத்தை 8.8 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாகக் குறைத்தது. இதனால் பி.எப் கணக்கு வைத்துள்ள சுமார் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டனர்.
 
அதைத்தொடர்ந்து தற்போது சிறு சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தையும் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம்  ஒவ்வொரு காலாண்டும் அரசின் பத்திரங்களின் வருவாயைப் பொருத்து சிறிதளவு மாறிக்கொண்டே இருக்கும். கடந்த சில வருடமாக அரசு பத்திரங்கள் லாபத்தில் குறைவை சந்தித்துள்ளது.
 
மேலும் மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திட்டத்தால் இந்தியாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் மேலும் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
 
ஏற்கனவே வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இவைகள் எல்லாம் சேர்ந்து சாமானியர்களை தான் பெரிது பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மத்திய அரசின் தொடர்சியான திட்டங்கள் அனைத்து சாதாரண மக்களை பெரிதும் பாதித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :