வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 5 ஏப்ரல் 2016 (12:04 IST)

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் கால் சதவீதம் குறைப்பு

வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களின் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி கால் சதவீதம் குறைத்துள்ளது.


 

 
கடன் கொள்கை மறு ஆய்வுக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.
 
அப்போது, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதம் கால் சதவீதம்  குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
இந்த வட்டி விகிதக் குறைப்பின் மூலம், தனி நபர் கடன், வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றின் வட்டிவிகிதம் குறைவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது. என்பது குறிப்பிடத்தக்கது.