வரலாற்றில் முதல் முறையாக ஐபோன் விற்பனை சரிவு


Abimukatheesh| Last Modified புதன், 27 ஏப்ரல் 2016 (20:38 IST)
ஆப்பிள் நிறுவனம் 2007, ஐபோனை அறிமுகப்படுத்தியது. அன்று முதல் செல்போன் விற்பனையில் முன்னிலை வகித்து வந்த ஐபோன், முதல் முறையாக விற்பனையில் சரிவைச் சந்தித்துள்ளது.

 

 
 
கடந்த ஆண்டு, முதல் காலாண்டில் 61.2 மில்லியன் விற்பனையான ஐபோன், இந்த ஆண்டு இதுவரை 51.2 மில்லியன் மட்டுமே விற்பனையானதாகவும், மேலும் விற்பனையில் சரிவு ஏற்பட வாய்புள்ளதாகவும், ஐபோன் விற்பனை முதல் முறையாக சரிவு கண்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
ஐபோன் விற்பனையின் திடீர் சரிவிற்கு முக்கிய காரணம், சந்தையில் விலை குறைவான ஆண்ட்ராய்டு போன்கள் அதிக அளவில் அறிமுகமானது தான் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
மேலும், மக்களிடையில் ஐபோன் 7 அதிக அளவில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதால், ஐபோன் 7 வெளியீட்டுக்குப் பின், ஐபோன் விற்பனை சரிவில் இருந்து மீள வாய்ப்பு உள்ளது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்தது.
 


இதில் மேலும் படிக்கவும் :